நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 ரிங்கிட்டில் 3 வெற்றி வாய்ப்புகள்: புத்தம் புதிய பிக் ஸ்வீப் டிக்கெட்டுகள் அறிமுகம் 

கோலாலம்பூர்:

மூன்று ரிங்கிட்டில் மூன்று வெற்றி வாய்ப்புகளை உள்ளடக்கிய புத்தம் புதிய பிக் ஸ்வீப் டிக்கெட்டுகளை இன்று பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
 
பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வகை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இதன் தொடர்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. 

இதன் தொடர்பில் பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவன  தலைமை செயல் அதிகாரி சிம் கோக் சூம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். 

மூன்று ரிங்கிட்டுக்கு வாங்கும் பிக் ஸ்வீப் டிக்கெட்டில் முதல் பரிசாக வெள்ளி இரண்டு மில்லியன் கிடைக்க வாய்ப்புள்ளது.

அடுத்து 'Instant Scratch' வாய்ப்பின் வழி வெள்ளி ஒரு லட்சம் அதிர்ஷ்ட தொகையை வெல்வதற்கான பொன்னான வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது வாய்ப்பாக வெள்ளி 8,888; வெள்ளி 888; வெள்ளி 88 என மூன்றடுக்கு பணப் பரிசுகளை வெல்லும் வெற்றி வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த புதிய அதிர்ஷ்ட அத்தியாயத்தில், மில்லியன் கணக்கில் பணப்பரிசு, அந்த நிமிடமே உங்களின் அடுத்த அதிர்ஷ்ட வாய்ப்பை பரிசோதித்துப பார்க்கும் பொன்னான வாய்ப்பு, மூன்றாவதாக மூன்று அடுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு என வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில்  பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது என்று சிம் கோக் சூன் மேலும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset