நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியினால் ஏழ்மையற்ற இந்திய சமுதாயத்தை உருவாக்குவதே ஶ்ரீ முருகன் நிலையத்தின் இலக்கு: சுரேன் கந்தா

பெட்டாலிங்ஜெயா:

கல்வியினால் ஏழ்மையற்ற இந்திய சமுதாயத்தை உருவாக்குவதே ஶ்ரீ முருகன் நிலையத்தின் முதன்மை இலக்காகும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

அரசாங்கத்தின் ஈ-காசே தரவு பட்டியலில் இடம் பெற்றுள்ள வறுமை கோட்டின் கீழ் பதிவு பெற்ற இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு  இலவசமாக
ஶ்ரீ முருகன் நிலையத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர்
ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் ஶ்ரீ முருகன் நிலையங்களில் ஈ-காசே
பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி படிப்பு முடியும் வரையில் இலவசமாக கல்வி கற்கலாம். 

மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்குகள்,  சிந்தனைத் திறன் பட்டறைகள், தன்முனைப்பு பயிற்சிகள், கையேடுகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 

நமது சமுதாயத்தை சூழ்ந்துள்ள ஏழ்மையை நிரந்தரமாக ஒழிக்க ஒரெந் ஆயுதம் கல்வியாகும். 

இந்த கல்வியை முதன்மையாக முன்வைத்து ஶ்ரீ முருகன் நிலையம் கடந்த 43 ஆண்டுகளாக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கல்வியின் வாயிலாக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வெற்றி பயணத்தின் புதிய புரட்சியாக ZEROB40 திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஶ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் படை தொண்டூழியர்கள் எனது தலைமையில் இந்த குடும்பங்களை நேரில் சந்தித்து மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், படிப்பு பொருட்கள், அமர்ந்து படிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த ZERO B40 இலவச கல்வி திட்டத்தில் ஈ-காசே பிரிவு இந்திய மாணவர்கள் பங்கு பெற்று பயனடைய பெற்றோர்களும், சமூக ஆர்வளர்களும் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை 011-1122 9464 தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக எஸ்பிஎம் தேர்வில் வெற்றியடைய முக்கிய வியூகங்கள் வகுக்கும் நோக்கில் அர்ஜூனா வியூகம் எஸ்எம்சி தேசிய கருத்தரங்கு இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 450 மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றனர்.

எஸ்பிஎம் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை இப்போதே தயார்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset