நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் 

கோத்தா கினாபாலு: 

சபா மாநில நம்பிக்கை கூட்டணி, GRS அரசியல் கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு குறித்து தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில்  ஈடுபடும் என்று சபா மாநில பிகேஆர் கட்சி தலைவர் முஸ்தஃபா சக்முட் கூறினார். 

சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்த நம்பிக்கை கூட்டணி தலைமை தங்கள் தரப்புக்கு பச்சை சமிக்ஞை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

நிலையான அரசியல் ஒத்துழைப்பினைக் கொண்டு வருவது தான் சபா மாநில நம்பிக்கை கூட்டணியின் முதன்மை நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

தேசிய முன்னணியுடன் முதல் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். தற்போது ஜி.ஆர். எஸ். கூட்டணியுடன் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது 

சபா மாநிலத்தின் 17ஆவது சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset