நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட்ஜாலிலில் தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழா: ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்:

புக்கிட்ஜாலிலில் நடைபெறவிருக்கும் தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பயிற்சி வாரம் 2025 கற்றல் திருவிழா வரும் ஜூன் 14, 15ஆம் தேதிகளில் புக்கிட்ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி, வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகள் இங்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதனால் இந்த விழாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதவள அமைச்சின் ஆதரவுடன் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாடு செய்யும் தேசிய பயிற்சி வாரம் திட்டம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

எல்லைகளுக்கு அப்பால் கற்றல் என்ற கருப்பொருளுடன்  இந்த ஆண்டுக்கான பயிற்சி வாரம் நடைபெறுகிறது.

மேலும் ஆசியான் திறன் ஆண்டு 2025ஆம் ஆண்டுடன் இணைந்து தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு இப்பயிற்சி வாரம்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பின்னணி அல்லது வயது வித்தியாசமின்றி அனைத்து மலேசியர்களுக்கும் இலவச கற்றல், பயிற்சிகளை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டுக்கான பயிற்சி வாரம் 70,000க்கும் மேற்பட்ட இலவச படிப்புகள் இணையம், நேருக்கு நேர்,  சுயமாகவும் வழங்கப்படவுள்ளன.

இருப்பினும் இந்த வார இறுதியில் புக்கிட் ஜாலிலில் நடைபெறும் இரண்டு நாள் தவிழாவில் கவனம் செலுத்தப்படுகிறது.

இது கல்வி, தொழில் திறன்கள், பொழுதுபோக்கு,  நவீன வாழ்க்கை முறை செயல்பாடுகளை  ஒரே இடத்தில் இணைக்கும்.

இந்த இரண்டு நாள் தவிழா முழுவதும் பல்வேறு அற்புதமான நிகழ்வுகள் பார்வையாளர்களுக்காக காத்திருக்கின்றன. 

அவற்றில், பிரபலமான அனிமேஷன் கதாபாத்திரமான எஜென் அலியின் சிறப்பு தோற்றம், உள்ளூர் ராக் இசைக்குழு பங்க்ஃபேஸ், பிரபல பாடகர் அலிஃப் சத்தார்,  தி லோகோஸின் நிகழ்ச்சிகளும் அதில் அடங்கும்.

இதே போன்று பல நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் மக்களுக்காக காத்திருக்கிறது.

இவ்விழா இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். முற்றிலும் இலவசமாக இவ்விழா நடைபெறும்.
 
மேலும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இவ்விழா ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழா குறித்த மேல்விவரங்களுக்கு  www.nationaltrainingweek.gov.my என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மக்கள் வலம் வரலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset