நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகாஜா இந்து சங்க பேரவையின் திருமுறை ஓதும் விழா 

பத்துகாஜா: 

இந்து சமயத்தை வளப்படுத்தும் பொருட்டு திருமுறை ஓதும் பண்பினை மாணவர்களிடையே செழிக்க செய்ய வேண்டும். அதை விடுத்து போட்டிகளுக்காக திருமுறை கற்பது ஏற்புடையதல்ல என்று மலேசிய இந்து சங்கம் பத்துகாஜா பேரவையின் கெளரவ செயலாளர் ஜெ.மேமலா கூறினார்.

இவ்வாண்டுடன் 47 வது ஆண்டாக திருமுறை ஓதும் விழாவை பத்துகாஜா இந்து சங்க பேரவை நிறைவு செய்கிறத. இவ்வாண்டில் இவ்வட்டாரத்திலுள்ள 80 மாணவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களில் 50 மாணவர்கள் தனிப் பிரிவுகளில் போட்டியிட்டனர். மீதமுள்ள 30 மாணவர்கள் குழு முறையில் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக, இத்தகைய திருமுறை ஓதும் செயல்நடவடிக்கைகள் வாயிலாக மாணவர்கள் சிறந்த பண்பாளர்களாக உருமாற்றம் செய்ய முடியும். இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக மாணவர்கள் ஒரு நல்ல பண்பாளராகவும், சிறந்த குடிமகனாகவும் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் சொன்னார்.

இவ்வட்டாரத்திலுள்ள இந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, வாரம் ஒரு முறை நடைபெறும் சமய வகுப்பிற்கு அனுப்பவும். இத்தகைய சமய வகுப்புகளின் வாயிலாக உங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த முடியும். குறிப்பாக, இங்கே சமய கதைகள், புராணக் கதைகள், சமய பாடல்கள் மற்றும் சமய நடவடிக்கைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அதே வேளையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆலய மண்டபத்தை இலவசமாக வழங்கிய பத்துகாஜா ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய நிர் வாகத்தினருக்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார். அத்துடன், வருகையாளர்களுக்கு காலையுணவு மற்றும் மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் அவர் நன்றிக் கூறிக்கொண்டார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset