செய்திகள் மலேசியா
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை தொடர்ந்து டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மக்களின் சுமையைக் குறைக்கவும், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும், டீசல் நுகர்வோருக்கான உதவியை மேம்படுத்த மடானி அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தொடர்ச்சியான அழுத்தம், குறிப்பாக சர்வதேச பெட்ரோலிய விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு ஆகியவற்றின் பின்னணியில் இந்த மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடையூறுகளால், சுத்திகரிக்கப்பட்ட டீசலின் விலை ஒரு பேரலுக்கு 250 அமெரிக்க டாலராகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
இது மேற்கு ஆசிய மோதலுக்கு முந்தைய விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்த விலை உயர்வினால் மக்கள் மீது ஏற்படும் நேரடித் தாக்கத்தை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.
குறிப்பாகத் தகுதிபெறும் நெல் விவசாயிகள், சிறு விவசாயிகள், தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட உதவியை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதே மடானி அரசாங்கத்தின் தெளிவான முன்னுரிமையாகும்.
மேலும் மக்களுக்குத் தொடர்ந்து உணவு விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உணவு உற்பத்தியாளர்களுக்கு உதவுவது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களை இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளடக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
