நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, தனது கால்களின் கட்டுப்பாட்டை இழந்ததாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்தை விவரித்த 100 வயதான அவர்,

தனது வழக்கமான காலை உடற்பயிற்சியைச் செய்து கொண்டிருந்தபோது, ​​தனது வலது காலின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

மேலும் தனக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான வலியால் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து ஐஜேஎன் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டேன்.

அங்கு மருத்துவர்கள் அவரது வலியைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு வலி குறைந்தது. ஆனால் அது வலி இன்னும் இருந்தது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட பாட்காஸ்ட் டாக்டர் எம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியிலிருந்து அவர் கூறினார்.

ஆனால் இப்போது, ​​மூன்று மாதங்களுக்குப் பிறகு, நான் குணமடைந்து நிற்க முடிகிறது.

ஆனால் என்னால் இன்னும் என் கால்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்குக் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset