
செய்திகள் மலேசியா
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்ய தடையா? உயர்க்கல்வி அமைச்சர் விளக்கம்
கோலாலம்பூர்:
சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்கு தடை விதிப்பது உட்பட இன்னும் பல பரிந்துரைகளை உயர்க்கல்வி அமைச்சகம் பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில தரப்பினர்களிடமிருந்த இந்தப் பரிந்துரைகள் பெறப்பட்டதை Zambry உறுதிப்படுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்குப் பதிலாக பகலில் பயணம் செய்வதை உயர்க்கல்வியமைச்சகம் கட்டாயமாக்கலாம் என்றூம் சிலர் தெரிவித்துள்ளதாக Zambry குறிப்பிட்டார்.
இது மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
பரிந்துரைகள் முறையாக ஆலோசிக்கப்பட்ட பின் முறையான நடவடிக்கைகளை உயர்க்கல்வியமைச்சகம் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm