
செய்திகள் உலகம்
Jetstar Asia விமானச் சேவை நிறுத்தப்படுகிறது: 500 ஊழியர்கள் பணி இழக்கிறார்கள்
சிங்கப்பூர்:
Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
அந்தத் தகவலை Jetstar Asia பேச்சாளர் தெரிவித்தார்.
ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடும் வேலை ஆதரவுச் சேவைகளும் வழங்கப்படும்.
குழுமத்திலும் மற்ற விமான நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புத் தேடித் தர Qantas முயல்கிறது.
ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia சிங்கப்பூரிலிருந்து இயங்குகிறது.
Jetstar Asia அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி செயல்பாடுகளை நிறுத்துகிறது.
Jetstar Asia அடுத்த 7 வாரங்களுக்குத் தொடர்ந்து விமானச் சேவைகளை வழங்கும்.
அதற்குப் பிந்திய தேதிகளில் ஏற்கனவே விமானச்சீட்டு வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்.
Jetstar பற்றுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடர்புகொள்ளப்படுவர். அவர்களுக்குப் பற்றுச்சீட்டுக்கு ஈடான பணம் வழங்கப்படும்.
ஆசியாவில் 16 விமானப் பாதைகள் பாதிக்கப்படும் என்று Qantas சொன்னது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ், சீனா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு Jetstar Asia விமானச் சேவை வழங்குகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm