நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராயல் கிங்ஸ் குழுமம் ஆதரவுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற 'எப்.எஸ்.ஐ.எம்' நல்லிணக்க நோன்பு திறப்பு 2026 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், Federation of Singapore Indian Muslims (சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பு) ஏற்பாட்டில் “எப்.எஸ்.ஐ.எம் நல்லிணக்க நோன்பு திறப்பு 2026” நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு Royal Kings Group (ராயல் கிங்ஸ் குழுமம் – சிங்கப்பூர்) ஆதரவளித்தது.

இந்த நிகழ்வு 08 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, டி வில்லா பால்ரூம், 320 செராங்கூன் ரோடு,சென்ட்ரியம் ஸ்கொயர், சிங்கப்பூர் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் முக்கிய விருந்தினராக சிங்கப்பூர் சட்ட அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் முரளி பிள்ளை அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

பல துறைகளை சேர்ந்தோர் கலந்து கொண்ட இஃப்தார்

இந்த இஃப்தார் நிகழ்வில் 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள், சமூக தலைவர்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் “ஒரே நாடு – ஒரே மக்கள்” என்ற தேசிய பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.

நிகழ்வில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர், தலைவர் திரு சிராஜுதீன் அவர்கள் முக்கிய விருந்தினர் திரு முரளி பிள்ளை அவர்களை அன்புடன் வரவேற்று, அவருடன்  கலந்துரையாடினார்.

நிகழ்வில் எப்.எஸ்.ஐ.எம் தலைவர் ஹாஜி முஹம்மது பிலால் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தனது உரையில் அவர், சிங்கப்பூரில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் பணிகளில் எப்.எஸ்.ஐ.எம் தொடர்ந்து செயல்பட்டு வருவதை விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து Indian Heritage Centre (இந்திய பாரம்பரிய மையம்) சார்ந்த ஆர். ராஜாராம் அவர்கள் உரையாற்றி, சமூகங்களில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சமூக நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை போன்ற மதிப்புகள் சிங்கப்பூரின் பல்துறை சமூக வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூத்த அமைச்சர் முரளி பிள்ளை உரை

முக்கிய விருந்தினர் மூத்த அமைச்சர் முரளி பிள்ளை அவர்கள் உரையாற்றுகையில், சிங்கப்பூர் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் நல்லிணக்கம், ஒற்றுமை, பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் கலாச்சாரம் குறித்து பாராட்டினார்.

மேலும், தமிழ் சமூகத்திற்கும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் எப்.எஸ்.ஐ.எம் அமைப்பின் பணிகளை அவர் பாராட்டினார். இந்த நிகழ்வை ஆதரித்த ராயல் கிங்ஸ் குழுமத்திற்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

நிகழ்வில் உஸ்தாத் மில்லத் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றி, நோன்பின் ஆன்மீக முக்கியத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கினார். நோன்பு மனிதர்களில் ஒழுக்கம், பொறுமை, கருணை ஆகியவற்றை வளர்க்கும் என்பதையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் இயக்குநர் திரு இப்ராஹிம், மூத்த ஆலோசகர் திரு ஜலாலுதீன், தகவல் தொழில்நுட்பத் தலைவர் திரு ரியாசுதீன், உலகளாவிய வர்த்தக செயல்பாட்டு தலைவர் திரு வரின், விருந்தோம்பல் செயல்பாட்டு தலைவர் திரு அரிஃப், மூத்த பொதுமக்கள் தொடர்பு அலுவலர் கேரி ஹாரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சிங்கப்பூர் ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு

நிகழ்வின் இறுதியில், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நோன்பு திறப்பு உணவை பகிர்ந்து கொண்டனர். இது சிங்கப்பூரின் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் “ஒரே நாடு – ஒரே மக்கள்” என்ற தேசிய பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

இந்த நிகழ்வு சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset