செய்திகள் உலகம்
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
தெஹ்ரான்:
தேவைப்பட்டால் தொடர்ந்து போரிட ஈரான் தயாராக இருப்பதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இதனால் போர் விரைவில் முடிவடையும் என்ற அமெரிக்க தலைவர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் புதிய தாக்குதலை தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அரக்சி, ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடரத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இனி திட்டத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.
“தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேவையான காலம் முழுவதும் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்,” என அவர் கூறினார்.
இதற்கிடையில், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் போரின் முடிவு எப்போது என்பதைக் தீர்மானிப்பது நாங்களே என அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளது.
முன்னர் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை அனுபவம் மிகவும் கசப்பானது என்றும், அதனால் இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எங்களின் திட்டத்தில் இல்லை என்றும் அரக்சி வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 4:02 pm
“வான்வெளி பாதுகாப்பில் தளர்ச்சி இல்லை”: ஈரானிடம் துருக்கி கடும் எச்சரிக்கை
March 10, 2026, 3:14 pm
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
March 10, 2026, 6:17 am
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
March 9, 2026, 4:24 pm
