செய்திகள் உலகம்
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
சிங்கப்பூர்:
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் அவர்கள் நேற்றிரவு சிங்கப்பூர் வந்தடைந்தனர்.
விமானத்தில் புருணை, இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா ஆகியவற்றின் குடிமக்களும் இருந்ததாக அமைச்சு தெரிவித்தது.
அவர்களுக்காக நீண்டநாள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
ஓமானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இரண்டாவது சிறப்பு விமானத்தை எதிர்பார்த்திருந்தோரின் முகங்களில் அளவில்லா மகிழ்ச்சி தென்பட்டது.
மீண்டும் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடிந்ததில் அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
பயணிகள் சிலர் பாதுகாப்பாக நாடு திரும்பியதில் நிம்மதி என்றனர்.
துபாயிலிருந்து ஓமானுக்குச் செல்ல நினைத்ததைவிட அதிக நேரமானதாய்ச் சிலர் கூறினர்.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பயணம் சுமுகமாக அமைந்ததாய் சிலர் தெரிவித்தனர்.
பஹ்ரைன், கத்தார், குவைத், ஜோர்டான் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூரர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்குத் திட்டமிடப்படுகிறது.
நிலைமையைப் பொறுத்து வரும் வியாழக்கிழமைக்குள் (12 பிப்ரவரி) மூன்றாவது சிறப்பு விமானம் ரியாத் அல்லது ஜித்தாவிலிருந்து கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 6:58 pm
