செய்திகள் உலகம்
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
தாய்லாந்து:
உசா என்ற 22 வயதுடைய பெண், தனது சகோதரியின் கணவரால் பாலில் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில், ஹாங் டொங் மாவட்டத்தில் நடந்தது. சம்பவவத்தின் போது உசாவின் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டதுடன், அவரின் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையின் போது, உசா அக்காவின் கணவரான பனுவாட் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, சம்பத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவித்தார். பனுவாட், உசா தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை தாக்க முயன்றதாக கூறியுள்ளார். உசா தன்னை தாக்க முயன்றதால், பனுவாட் அவரின் கழுத்தை நெறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது உசா மாதவிடாய் காலத்தில் இருப்பதனால் பனுவாட் அவரை பாலியல் வன்முறை செய்யும் திட்டத்தை கைவிட்டதாக போலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் உசாவின் கழுத்து நெறிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக உணர்ந்த பனுவாட், இந்த சம்பவத்தை கொள்ளையடித்தைப் போல மாற்றியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது பனுவாட் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 4:02 pm
“வான்வெளி பாதுகாப்பில் தளர்ச்சி இல்லை”: ஈரானிடம் துருக்கி கடும் எச்சரிக்கை
March 10, 2026, 3:29 pm
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
March 10, 2026, 6:17 am
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
March 9, 2026, 4:24 pm
