செய்திகள் உலகம்
இஸ்ரேலை ஆதரித்து செய்தி வெளியிட்டால் பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக சமூக ஊடக நிறுவனங்கள் வழக்கு
டெல் அவிவ்:
காசாவில் நடந்த போர் முழுவதும் சமூக ஊடகங்களில் இஸ்ரேல் சார்பின் செய்திகளை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களுக்கு முழுமையாக பணம் செலுத்தப்படவில்லை என்று கூறி, பல செல்வாக்கு மிக்கவர்கள், தகவல் தொடர்பு ஆலோசகர்கள், ஊடக நிறுவனங்கள் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்த வழக்கு அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டு, ஒரு சமூக ஊடகப் பதிவுக்கு, அமெரிக்கா டொலர் 7,000 (சுமார் ரிங்கிட் 27,000) வரையிலான பணம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் 1.7 மில்லியன் ஷெக்கல் (சுமார் 2.1 மில்லியன் ரிங்கிட்) இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மற்றொரு நிறுவனம் 600,000 ஷெக்கல் (சுமார் 763,000 ரிங்கிட்) பணத்தை பெறவில்லை என்றும் புகார் செய்துள்ளது.
வழக்கு ஆவணங்களின்படி, பல ஒப்பந்ததாரர்கள் தங்களது பயணம், டிஜிட்டல் உள்ளடக்கம் தயாரிப்பு, நிறுவனத்தின் சமூக ஊடக மேலாண்மை உள்ளிட்ட பல செலவுகளை தாங்களாகவே மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இஸ்ரேல் அரசு வாக்குறுதி அளித்தபடி பணத்தை வழங்க மறுத்ததால், சம்பந்தபட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, வழக்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 3:29 pm
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
March 10, 2026, 3:14 pm
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
March 10, 2026, 6:17 am
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
