செய்திகள் உலகம்
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
தேஹ்ரான்:
ஈரானின் புதிய தலைவராக ஐயதுல்லா மொஜ்தபா கமெனி நியமிக்கப்பட்ட பிறகு, ஈரான் தன்னுடைய முதல் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது என்று அந்நாட்டு செய்தி ஊடகமான IRIB தெரிவித்துதுள்ளது.
இஸ்ரேலில், ஏவுகணை எச்சரிக்கை சிரன் நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளான தெல் அவிவ், ஹைபா நகரங்களிலும் ஒலித்தது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.
இடைமறிப்பு ஏவுகணையின் துண்டுகள் மத்திய இஸ்ரேலில் விழுந்ததாகக் கூறப்பட்டதையடுத்து அதிகாரிகள் மத்திய இஸ்ரேலில் குறைந்தது இரண்டு இடங்களுக்கு அழைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
ஏவுகணைத் தாக்குதலில் பாறை தலையில் தாக்கியதில் ஒரு பெண் காயமடைந்ததாக மேகன் டேவிட் அடோம் அவசர சேவை தெரிவித்துள்ளது.
ஏவப்பட்ட ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்குவதாக அறிவித்த பிறகு, நிலைமை இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் மக்கள் 'நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தங்குமிடங்களை விட்டு வெளியேறலாம்' என்றும் இராணுவம் கூறியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 6:58 pm
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பேரிடர்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
March 8, 2026, 5:12 pm
அஞ்சல் சேவையைப் பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
March 7, 2026, 4:40 pm
