செய்திகள் உலகம்
லெபனான் குடியிருப்புகள் மீது இஸ்ரேலின் ஆபத்தான பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்: மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
பெய்ரூட்:
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் சட்டவிரோதமாக வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க் தலைமையிடமாக செயல்படும் அந்த அமைப்பின் அறிக்கையின்படி, மார்ச் 3-ஆம் தேதி தெற்கு லெபனானில் உள்ள யோமோர் நகரில் பொதுமக்கள் வீடுகள் நோக்கி வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், துப்பாக்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் வெடித்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை காட்டும் ஏழு படங்களின் இடத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அப் பகுதியில் குறைந்தது இரண்டு வீடுகளிலும் ஒரு வாகனத்திலும் ஏற்பட்ட தீயை பொதுமக்கள் பாதுகாப்பு பணியாளர்கள் அணைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வெள்ளை பாஸ்பரஸ் என்பது ஆக்சிஜனுடன் தொடர்பு கொண்டதும் எளிதில் எரியும் பொருளாகும். இது போர் நிலைகளில் புகை திரை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் இதே பொருள் தீவைத்து தாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம். இதனால் தீப்பற்றுதல், கடுமையான தீக்காயம், சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு, மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 6:58 pm
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பேரிடர்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
March 8, 2026, 5:12 pm
அஞ்சல் சேவையைப் பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
March 7, 2026, 4:40 pm
