
செய்திகள் மலேசியா
பதினொரு மலேசிய யாத்ரீகர்கள் புனித நகரில் மரணமடைந்துள்ளனர்: சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் தகவல்
மக்கா:
ஹஜ் புனித பயணத்திற்குச் சென்றுள்ள மலேசிய யாத்ரீகர்களில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் கூறினார்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசிய பெண் யாத்ரீகர் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கமும் தாபோங் ஹஜி வாரியமும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டன.
சம்பந்தப்பட்ட மாது இறந்த தகவலானது அவரின் வாரிசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை 10 மலேசியர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வேளையில் ஒருவர் மட்டும் உடல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும்: எரிசக்தி ஆணையம்
June 20, 2025, 5:47 pm