
செய்திகள் மலேசியா
ஓமிக்ரோன் துணைத் திரிபுகள் அதிக தொற்றுத்தன்மை கொண்டவை: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
கோவிட்-19 நோய் தொற்றின் புதிய திரிபான ஓமிக்ரோனின் துணைத் திரிபு தொற்று பரவல் தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளில் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் 19 நோய் தொற்று காலக்கட்டத்தில் மக்கள் பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றும்படி பொது சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
LP.8.1 மற்றும் NB.1.8.1 போன்ற ஓமிக்ரோன் வைரஸின் துணைத் திரிபு அதிகம் பரவும் தன்மை கொண்டவையாக உருமாறி இருப்பதாக மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூக சுகாதார நிபுணர் பேராசிரியர் Dr Sharifa Ezat Wan Puteh தெரிவித்தார்.
இந்தத் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இருப்பினும் சில நாட்களுக்குள் அவர்கள் குணமடைவார்கள்.
அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகம் மக்கள் கூடும் இடங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும் முகக்கவசம் அணியவும் அவர் வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 1:40 pm
மலேசிய தூதரகம் ஈரானில் தற்காலிகமாக மூடல்: அனைத்து மலேசியர்களும் நாடு திரும்ப உத்தரவு
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm