நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்: 

தாய்லாந்தின் பிரதமராக இன்று மீண்டும் நியமிக்கப்பட்ட தனது சக பிரதமர் அனுடின் சர்ன்விராகுலுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 நெருங்கிய அண்டை நாடு, ஆசியான் கூட்டாளிகளாக, மலேசியாவும் தாய்லாந்தும் ஒருவருக்கொருவர் வெற்றியில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளன என்று அன்வார் தமது முகநூல் பதிவில் வலியுறுத்தினார்.

"தாய்லாந்தை வழிநடத்துவதற்கான அவரது புதிய ஆணையைப் பெற்றுள்ள பிரதமர் அனூதின் சர்ன்விராகுலுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர். 

அனுடினுடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்வதையும், குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எல்லை ஒத்துழைப்பு, பரந்த பிராந்திய ஆகிய துறைகளில் மலேசியா-தாய்லாந்து கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் ஆவலுடன் எதிர்நோக்குவதாக அன்வார் மேலும் கூறினார்.

முன்னதாக, தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அனுடின், நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூமிஜெய்தாய் கட்சித் தலைவர் 293 வாக்குகளைப் பெற்று, 119 வாக்குகளைப் பெற்ற மக்கள் கட்சியின் நத்தபோங் ரூயெங்பனாவட்டைத் தோற்கடித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset