செய்திகள் மலேசியா
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
கோலாலம்பூர்:
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பலை போலிசார் முறியடித்துள்ளனர்.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.
நேற்று புக்கிட் டாமன்சாராவில் நடத்தப்பட்ட சோதனையில், மினி கேசினோ சூதாட்டக் கும்பல் முறியடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஹாங்காங் நாட்டவர் உட்பட நான்கு பேரை போலிசார் கைது செய்தது.
கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் டி7 பிரிவினர், ஜாலான் கெலெங்காங்கில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில், பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்தச் சோதனையை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 27 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.
விசாரணையில், இந்தக் கும்பல் மினி-கேசினோ வகை சூதாட்டத்தை நிர்வகித்து, ஒழுங்கமைத்து, ஊக்குவிப்பது தெரியவந்துள்ளது.
இந்தச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அவர்கள் இணையதளங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
March 19, 2026, 9:45 pm
மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து
March 19, 2026, 8:20 pm
