செய்திகள் மலேசியா
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
ஷாஆலம்:
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.
பண்டிகைக் காலங்களில் செலவு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேற்கு ஆசியாவில் ஏற்படும் மோதல்களால் உருவாகக்கூடிய எந்தவொரு நிச்சயமற்ற நிலைக்கும் தயாராக இருக்கு வேண்டும்.
ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தியில்,
எந்தவொரு நிச்சயமற்ற நிலையையும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் சமூகம் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உலக அளவில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளை, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல்களையும் போர்களையும் நான் கவனத்தில் கொள்கிறேன். இவை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு குடிமகனும் எந்தவொரு எதிர்பாராத நிகழ்விற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும், செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
மழை வருவதற்கு முன் குடையைத் தயார் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரும் தயாராக வேண்டும் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:47 pm
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
March 19, 2026, 9:45 pm
மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து
March 19, 2026, 8:20 pm
