நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்

புத்ராஜெயா:

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து எங்கள் கலந்துரையாடல் அமைந்தது.

குறிப்பாக, அமைதி, நிம்மதிக்கு உரியதாக இருக்க வேண்டிய ரமலான் மாதத்தில் இந்த நிலை மேலும் மோசமடைகிறது.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் குண்டுவீச்சு, படுகொலையைக் கண்டிப்பதில் மலேசியாவின் உறுதியான, நிலையான நிலைப்பாட்டை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கவும், அமைதி, ராஜதந்திரம், ஆரோக்கியமான உரையாடலின் குரலை நிலைநிறுத்த முயற்சிகளைத் திரட்டவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று பிரதமர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபை, பிரிக்ஸ் உட்பட அனைத்து சர்வதேச அரங்கங்களிலும் மலேசியாவும் இந்தியாவும் கைகோர்த்து தங்கள் கூட்டுக்குரலை வலுப்படுத்த வேண்டும் என்று தானும் தனது சகாவான மோடியும் ஒப்புக்கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset