நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா

கோலாலம்பூர்:

நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவது பொருத்தமற்றது.

எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

ஒரு லிட்டர் டீசல் விலை 80 சென் உயர்ந்து 4.72 ரிங்மிட்டாக அதிகரித்ததற்கு வருத்தமளிக்கிறது.

பெருநாள் பண்டிகைக்கு முன்னதாக, நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இந்த விலை உயர்வு பொருத்தமற்றது.

இந்த விலை உயர்வால், குறிப்பாகப் போக்குவரத்துச் செலவுகளில் தொடர் விளைவுகள் ஏற்படும்.

அது பொருட்களின் விலைகளையும் உயர்த்தும்.

முஸ்லிம்கள் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகும் இவ்வேளையில், பிரதமர் மக்களின் மனநிலையை உணராதவராக இருக்கிறார் என்பதை இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காட்டுகின்றன  என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset