செய்திகள் மலேசியா
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
புத்ராஜயா:
உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதில் மக்களின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, இஸ்லாமிய, இந்து சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா அமைப்புகள் (NGOs) மேற்கொண்ட அமைதி முயற்சிகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
"அமைதியான பாதையைத் தேர்ந்தெடுத்து, பிளவுகளை நிராகரித்து, பரஸ்பர மரியாதை உணர்வை நிலைநிறுத்துவதில் மக்களின் முதிர்ச்சியின் அளவை இது பிரதிபலிக்கிறது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த நடவடிக்கை கருணை, ஒற்றுமை, இனங்களுக்கிடையேயான மரியாதை ஆகிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட மலேசியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று அன்வார் தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை என்ற கூறு, நாட்டின் வலிமையின் அடித்தளமாகத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக்கியதில் மலேசிய அரச காவல்துறை (PDRM) உட்பட அனைத்து தரப்பினரின் பங்கிற்காகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
"இந்த முயற்சி நம்மை ஒன்றிணைப்பதைத் தொடர்வதோடு, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ஒரு முன்மாதிரியாகவும் திகழட்டும்," என்று அவர் கூறினார்.
நேற்று, சுமார் 30 மலாய்-முஸ்லிம், இந்திய-இந்து அரசு சாரா இயக்கங்கள், இரு சமூகங்களையும் உள்ளடக்கிய அனைத்து இனப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தின.
உரையாடல் அமர்வின் போது, எழுந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் ஒரு பொதுவான கருத்தைக் கண்டறிவதற்காக, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதிப் பாதை ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:45 pm
மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து
March 19, 2026, 8:20 pm
