
செய்திகள் மலேசியா
113ஆவது அனைத்துலக தொழிலாளர்கள் மாநாட்டில் மலேசியாவின் தொழிலாளர்கள் சட்டம், உருமாற்றத்திற்கு MEF தற்காத்துள்ளது: டத்தோ டாக்டர் சையத் ஹுசைன்
ஜெனிவா:
ஜெனிவாவில் நடைபெறும் அனைத்துலக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 113ஆவது மாநாட்டில் மலேசியாவின் தொழிலாளர்கள் சட்டம், உருமாற்றத்திற்கு MEF மலேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆதரவும் தற்காத்தும் உள்ளது என்று MEF சம்மேளனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் உஸ்மான் கூறினார்.
மலேசியா அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து ரீதியிலான உருமாற்று நடவடிக்கைக்கும் MEF சம்மேளனம் அதன் முழு ஆதரவினை வழங்கும் அதேவேளையில் தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியா அதன் உறுதித்தன்மையான தொழிற்துறையிலான தொடர்பினை கொண்டுள்ளது. இதனால் தொழிற்துறைக்கான உருமாற்றத்தை மலேசியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. சீரமைக்கப்பட்ட தொழிற்துறை என்பது விபத்தினால் ஏற்பட்ட தொடக்கம் அல்ல. மாறாக நிலையான, நியாயமான மற்றும் ஒத்துழைப்பு மிகு செயல்திறனை கொண்டு இயக்குவதாக MEF சம்மேளனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் உஸ்மான் கூறினார்.
மேலும், மலேசிய மனிதவள அமைச்சு KESUMA கொண்டு வரும் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு MEF சம்மேளனம் தொடர்ந்து அதன் ஆதரவினை வழங்கும். 1959 தொழிலாளர்கள் சட்டம், 1959 வர்த்தக கூட்டமைப்பு சட்டம், 1967 தொழிற்துறை விவகாரங்கள் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த சட்டங்களின் திருத்தங்கள் யாவும் மலேசிய அரசாங்கம் தொழிலாளர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை உணர்த்துவதாக உள்ளது. அனைத்துலக அளவில் மலேசியாவின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.
முற்போக்கு, கொள்கை வரையறை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை மலேசியாவின் அணுக்கம் கொள்ளும் வியூக நடவடிக்கைகள் ஆகும். உலக அளவில் மலேசியாவின் முன்முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க உலக வர்த்தக சகாக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் குறிப்பிட்டார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm