
செய்திகள் வணிகம்
ட்ரம்பிடம் மோதியதால் எலோன் மஸ்கின் நிறுவனப் பங்குகள் படுவீழ்ச்சி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தொழிலதிபர் எலோன் மஸ்கின் நிறுவனங்களுடன் உள்ள அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாக மிரட்டியதை அடுத்து டிரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்குரிய அரசியல் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று மஸ்க் பதிலுக்குக் சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப், தாம் நிறுவிய ‘ட்ரூத் சோ ஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவில் கருத்து ஒன்றிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்கியது.
“வரவு செலவுத் திட்டத்தில் பில்லியன் கணக்கான பணத்தைச் சேமிக்க ஆக எளிதான வழி, இலோனுக்கு வழங்கப்பட்ட அரசாங்க விலைக்கழிவுகளையும் ஒப்பந்தங்களையும் நீக்குவதாகும்,” என்று திரு டிரம்ப், தமது ‘ட்ரூத் சோ ஷியல்’ தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
திரு டிரம்ப்பின் பதிவு வெளிவந்ததை அடுத்து திரு மஸ்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகளை வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை வர்த்தகர்கள் கணிசமான அளவில் கைவிட்டனர்.
இதனால் டெஸ்லாவின் பங்கு விலைகள் 14 விழுக்காடு சரிந்து அந்நிறுவனம் கிட்டத்தட்ட 150 பில்லியன் வெள்ளியை இழந்தது. டெஸ்லாவின் வரலாற்றில் இது ஆகப் பெரிய ஒரு-நாள் இழப்பாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm