நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவுடனான மோதலின் போது மத்தியஸ்தம் செய்ய அன்வார் மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் பாராட்டுகிறது: தூதர்

கோலாலம்பூர்:

இந்தியாவுடனான மோதலின் போது மத்தியஸ்தம் செய்ய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் பாராட்டுகிறது.

மலேசியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சையத் அஹ்சன் ராசா ஷா இதனை  கூறினார்.

டத்தோஶ்ரீ அன்வார் இரு நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல் தலைவர்.

இது ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக அவரது பங்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமாதானத் தூதர். அவரின் பங்கை நாங்கள் பாராட்டுகிறோம்.

அவர் மிக உயர்ந்த திறமை கொண்ட ஒரு அரசியல்வாதி. இந்த சகாப்தத்தின் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கான அவரது  முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்.

அவர் இரு நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படுகிறார்.

மேலும் பாகிஸ்தான்,  இந்தியாவின் தலைமையுடன் வலுவான உறவுகளை கடைப்பிடித்து வருகிறார், என்று அவர் இங்கு நடந்த  செய்தியாளர் சந்திப்பில் அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset