நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 ரிங்கிட் சாரா உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை: நிதியமைச்சகம் 

புத்ரா ஜெயா:

தேசிய தினத்தை முன்னிட்டு சாரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 ரிங்கிட் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சமூக ஊடகத்தில் இந்த உதவி நிதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று பகிரப்பட்ட தகவல் போலியானது என்றும் நிதியமைச்சகம் கூறியது.

அந்நிதி ஒரே முறை பொது மக்களின் அடையாள அட்டையில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

31-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் தங்களின் அடையாள அட்டையிலுள்ள 100 ரிங்கிட்டைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Giant, Mydin, HeroMarket உட்பட 4100 கடைகளில் பொது மக்கள் இந்நிதியைப் பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சகம் அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், அரிசி, சமையல் எண்ணெய், மருந்துகள் உட்பட14 பிரிவுகளில் 90,000 பொருள்களை வாங்க இயலும்.

பொது மக்கள் 31-ஆம் டிசம்பர் மாதத்திற்கு 100 ரிங்கிட்டைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அரசு அப்பணத்தை மீட்டுக் கொள்ளும் என்றும் நிதியமைச்சு கூறியது.

- அஸ்வினி செந்தாமரை 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset