நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி ஹஜ் யாத்திரை கடிதங்களால் 182 யாத்ரீகர்கள் ஏமாற்றப்பட்டனர்

சிப்பாங்:

போலி ஹஜ் யாத்திரை கடிதங்களால் 182 யாத்ரீகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக கேஎல்ஐஏ  விமான நிலையத்தில்  150க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஹஜ் யாத்ரீக மேலாண்மை நிறுவனத்தின் உரிமையாளர்,

டத்தோஸ்ரீ என்று கூறிக்கொள்ளும் ஒரு பெண் தன்னைத் தொடர்பு கொண்டு,  முஜமலா விசாவைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட யாத்ரீகர்களின் பயணத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டதாக ஒப்புக் கொண்டார்.

இருப்பினும், நேற்று காலையிலும் மாலையிலும் புனித பூமிக்கு பறக்க வேண்டிய பிரமுகர் யாத்ரீகர்கள் குழு எதுவும் இல்லை என்பதை ஹாஜி நிதி வாரியம் உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து  அவரது தரப்பினர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் கலந்துரையாடல்களை நிறுத்திவிட்டதாக அந்த உரிமையாளர்  கூறினார்.

புனித பூமியில் யாத்ரீகர்களை நிர்வகிக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அதாவது செல்லுபடியாகும் ஹஜ் விசாவைப் பெறுதல், சுற்று, பயண விமானங்களை வழங்குதல்,ஒப்புக்கொள்ளப்பட்ட தங்குமிடப் பொதிக்கான முழுப் பணத்தையும் செலுத்துதல் போன்ற நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பாட்டாளர் பூர்த்தி செய்தால் மட்டுமே என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset