நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகை வணிகர்கள், பொற்கொல்லர் சங்கத்திற்கான 500 அந்நியத் தொழிலாளர்கள் யாருக்கு வழங்கப்பட்டனர்?: டத்தோ ரசூல் கேள்வி

சுபாங்:

மலேசிய இந்தியர் நகை வணிகர்கள், பொற்கொல்லர் சங்கத்திற்கான 500 அந்நியத் தொழிலாளர்கள்
யாருக்கு வழங்கப்பட்டனர் என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல்  ரசூல் கேள்வி எழுப்பினார்.

பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு அரசாங்கம் எங்கள் துறைக்கு 2500 அந்நியத் தொழிலாளர்கள் அனுமதியை வழங்கினர்.

இந்த கோட்டாவின் கீழ் கிட்டத்தட்ட 700 அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் வந்துள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

ஆனால் சங்கத்திற்கு தெரிந்தவரை கிட்டத்தட்ட 200 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே இங்கு வேலை செய்ய வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அப்படி என்றால் எஞ்சிய 500 அந்நியத் தொழிலாளர்களை யார் நாட்டிற்குள் கொண்டு வந்தது.

அவர்கள் எங்கு வேலை செய்கின்றனர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த 2500 அந்நியத் தொழிலாளர்கள் என்பது எங்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த  வெற்றியாகும்.

ஆனால் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இதன் வாயிலாக பயனடையவில்லை என்பது உண்மை. இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

ஆகவே அரசாங்கம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே டிக் டாக் உட்பட சமூக ஊடகங்களின் வாயிலாக தற்போது நகை வணிகங்கள பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் கிடைத்துள்ளது.

 ஆகவே இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset