நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனடா நாட்டிலிருந்து பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியேறவில்லை: பெட்ரோனாஸ் குழுமத்தின் CEO தகவல் 

கோலாலம்பூர்: 

கனடா நாட்டிலிருந்து பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியேறாது. 

அந்நாட்டிலிருந்து பெட்ரோனாஸ் வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஶ்ரீ தெங்கு முஹம்மத் தௌஃபிக் அஸிஸ் கூறினார். 

இயற்கை எரிவாயுவை எடுக்கும் முயற்சிகளில் பெட்ரோனாஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கனடாவின் LNG எரிவாயு திட்டத்தில் தேசிய எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் பெர்ஹாட் நிறுவனம் 25 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது. 

கனடாவில் உள்ள எரிவாயு திட்டமான LNG திட்டத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறும் என்று பெட்ரோனாஸ் நிறுவனம் எதிர்பார்த்தது 

கனடா நாட்டில் பெட்ரோனாஸ் தொடர்ந்து அதன் வர்த்தகத்தை முன்னிருத்தும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset