நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரத்தை மீட்டெடுக்க புதிய மலாய் கூட்டணியில் சேர அம்னோ உறுப்பினர்களை துன் மகாதீர் அழைக்கிறார்

புத்ராஜெயா:

அரசாங்கத்தில் மலாய் அதிகாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மலாய் செயலகம் எனப்படும் புதிய கூட்டணியில் அம்னோ உறுப்பினர்கள் சேர வேண்டும்.

 முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது இந்த அழைப்பை விடுத்தார்.

இதில் ஒரு கட்சியாக அம்னோவை இயக்கத்தில் சேர அழைக்கவில்லை.

நான் அம்னோவை அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லை. ஆனால் அம்னோவில் உள்ள மலாய்க்காரர்களை நான் அழைக்கிறேன்.

இந்த முயற்சிக்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களை கட்சி உறுப்பினர்களாக நான் அழைக்கவில்லை.

அவர்களை மலாய்க்காரர்களாகவே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அவர் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின், பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின், கா பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம்  ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பாஸ், பெர்சத்துவையும் உள்ளடக்கிய இந்த மகா கூட்டணி  தற்போது அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அல்ல.

மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது ஒரு பெரிய கூட்டணி இது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset