நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சிகளை வழங்க மலேசியா தயார்: பிரதமர்

புத்ராஜெயா:

கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சிகளை வழங்க மலேசியா தயாராக உள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியா தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் மூலம் கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சியை வழங்க மலேசியா தயாராக உள்ளது.

இந்த திட்டத்தை தோட்டக்கலை, பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி ஒருங்கிணைப்பார்.

முன்னர் கினி பிசாவுடனான மலேசியாவின் உறவு மிகவும் எளிமையானது என்று கூறலாம், ஆனால் இந்த வருகையுடன் அது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

ஏனென்றால், ஆசியான் பிராந்தியத்துடனான உறவுகளை விரிவுபடுத்துவதில், வர்த்தகம், முதலீடு,  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மே;லும் அதிகரிக்கும்.

இதற்கு மலேசியாவை ஒரு முக்கிய தளமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்பாட்டையும் அந்நாடு அதிபர் ஜெனரல் உமாரோ சிசோகோ எம்பலோ கொண்டு வந்துள்ளார்.

இன்று பெர்டானா புத்ரா கட்டிடத்தில் எம்பலோவின் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்துடன் இணைந்து ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset