நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு: 500,000 யுனைடெட் கிங்டம் சுற்றுப் பயணிகளுக்கு இலக்கு

லண்டன்: 

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு 500,000 யுனைடெட் கிங்டம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடர்ந்து மலேசியாவின் வலுவான ஐரோப்பிய சந்தைகளில் இருப்பதாக துணைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

2024-ஆம் ஆண்டில் மட்டும், 390,035 இங்கிலாந்து பயணிகள் மலேசியாவிற்கு வருகை தந்தனர்.

RM2.5 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைக்கப் பெற்றதாக  யுனைடெட் கிங்டமில் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் பயணத்தின் மையமான லண்டனில் பிரச்சாரத்தைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை அஹமத் ஜாஹித் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset