நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹவானா 2025 கொண்டாட்டத்தின் போது  மலேசிய ஊடக மன்றத்தின் புதிய முன்னேற்றங்கள் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஹவானா 2025 கொண்டாட்டத்தின் போது மலேசிய ஊடக மன்றத்தின் புதிய முன்னேற்றங்கள் குறித்து அறிவிக்கப்படும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் (ஹவானா) 2025 கொண்டாட்டம் வரும்  ஜூன் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கொண்ட்டாத்தின் போது  மலேசிய ஊடக மன்றம் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது, நியாயமான, பொறுப்பான அறிக்கையிடலை உறுதி செய்வது,  ஊடகங்களுக்கு எதிரான புகார்களை விவேகமான முறையில் பொதுமக்கள் தெரிவிப்பதற்கான ஒரு மையமாக இருக்க இம்மன்றம் உருவாக்கப்பட்டது.

 மலேசிய ஊடக ம்ன்றத்தின் மசோதா 2024 பிப்ரவரியில் மக்களவையால் நிறைவேற்றப்பட்டதன் வாயிலாக மற்றொரு முக்கியமான சாதனை பதிவு செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலான விவாதத்திற்குப் பிறகு அச்சு, ஒளிபரப்பு, இலக்கவியல் ஊடகங்கள் உட்பட அனைத்து வகையான ஊடகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பான மலேசிய ஊடக மன்றத்தை நிறுவுவதில் மலேசியா  இறுதியாக வெற்றி பெற்றுள்ளது.

இன்று விஸ்மா பெர்னாமாவில் நடந்த ஹவானா 2025 இன் கூட்டத்தில் உரையாற்றிய ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset