நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்பட்டது: ஹன்னா இயோ

புத்ராஜெயா:

2026ஆம் ஆண்டுக்கான  சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம்  மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை உறுதிப்படுத்தினார்.

சுக்மா போட்டி உயர்மட்ட குழுவின் மதிப்பாய்வைத் தொடர்ந்து Petangue, Muaythai, சிலம்பம் ஆகியவை விருப்ப விளையாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.

சரவா இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா, மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ நோர்சா ஜக்காரியா ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிலாங்கூர் சுக்மாஏற்பாட்டுக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

சிலாங்கூர் சுக்மாவில் இப்போது 30 கட்டாய விளையாட்டுகளும் ஏழு விருப்ப விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளது.

மேலும் எந்த முன்மொழிவுகளும் அல்லது மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படாது என்பதை சுக்மா உயர் மட்ட குழு உறுதிப்படுத்தியுள்ளது என்று ஹன்னா இயோ கூறினார்.

சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் போனபோது இந்திய சமுதாயமே பொங்கி எழுந்து குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset