
செய்திகள் மலேசியா
அமானா இக்தியாரின் பெண் 2.0 திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு
சுங்கைபூலோ:
அமானா இக்தியாரின் பெண் 2.0 திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார்.
நாட்டில் ஏழை மக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் தான் அமானா இக்தியாரில் பெண் திட்டத்தின் வாயிலாக கடந்தாண்டு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
இந்திய பெண்கள் பொருளாதார ரீதியில் மேம்பாடு காண வேண்டும் என்பதுதான் இந்த பெண் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்தாண்டு நிதியில் கிட்டத்தட்ட 6,247 வர்த்தகர்களுக்கு 42,725,640 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த 6,247 வர்த்தர்களில் 1,062 பேர் புதியதாக வர்த்தகத்தை தொடங்கியவர் ஆவர்.
இத்திட்டம் பெண் வர்த்தகர்களுக்கு பெரும் பயனையளித்ததை தொடர்ந்து இவ்வாண்டு பெண் 2.0 திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குறிப்பாக இவ்வாண்டும் 100 மில்லியன் ரிங்கிட்டை இந்த பெண் திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 ஆயிரம் பெண் வர்த்தகர்களை உருவாக்கும் இலக்குடன் இந்நிதி ஒதுக்கப்படுகிறது.
10 ஆயிரம் பெண்கள் என்றாலும் அவர்களைச் சுற்றி இருக்கும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வருமானம், பொருளாதார ரீதியில் மேம்பாடு காண்பார்கள்.
இதுதான் அமைச்சின் முக்கிய இலக்காக உள்ளது
அமானா இக்தியார் தலைமையகத்தில் நடைபெற்ற பெண் 2.0 திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் 124 அமானா இக்தியார் அலுவலகங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக இந்த அலுவலகங்களுக்கு செல்லலாம்.
தங்களின் வாழ்க்கையை இந்திய பெண்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 5:50 pm
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகர் கைது
June 4, 2025, 4:56 pm
வறட்சி காலத்தில் சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது: டாக்டர் சுரேந்திரன்
June 4, 2025, 4:55 pm
கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடேசன், ஜோனதன் வேலாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது
June 4, 2025, 4:41 pm