நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியில் நியமன துணைத்தலைவர் பதவி குறித்து பேச்சுக்கள் இல்லை: பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் திட்டவட்டம் 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சியில் நியமன துணைத்தலைவர் பதவி குறித்து பேச்சுக்கள் இல்லை என பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கமில் முனிம் கூறினார். 

நூருல் இசா அன்வார் முன்மொழிந்த இந்த பதவி குறித்து கட்சி உறுப்பினர்கள் யாரும் விவாதிக்கவில்லை. 

பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் போட்டியில் தோல்வி அடைந்த ரஃபிசி ரம்லி, நூருல் இசா அன்வார் பரிந்துரைந்த நியமன துணைத்தலைவர் பதவியை ரஃபிசி ரம்லி மறுத்தார். 

மேலும், ரஃபிசி ரம்லியின் இந்த முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் உறுப்பினர் நோர் அஸ்ரின சுரிப் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பிகேஆர் கட்சி எந்தவொரு நபரையோ அல்லது தரப்பையோ நம்பிக்கொண்டு செயல்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

கடந்த மாதம் நடைபெற்ற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் போட்டியில் நூருல் இசா அன்வார் வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset