நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருங்கள்: ஹம்சாவுக்கு அன்வார் சவால்

கோலாலம்பூர்:

எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருங்கள்.

எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சவால் விடுத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் கொண்டு வருவதற்காக நான் காத்திருக்கிறேன்.

நான் அதை வரவேற்கிறேன். இதுவே சரியான செயல்முறையாகும்.

நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விரும்பினால், தயவுசெய்து அதை கொண்டு வாருங்கள்.

ஹம்சா மூன்று ஆண்டுகளாக இந்த தீர்மானத்தை  கொண்டு வர விரும்புவதாகக் கூறி வருகிறார்.

அப்படி ஏதும் இதுவரை நடக்கவில்லை.

முன்னதாக நேற்று கோலாலம்பூரில் நடந்த துருன் அன்வார் பேரணியின் போது ஹம்சாவின் அறிக்கை குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset