நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.99 ரிங்கிட்டில் பெட்ரோல் மலேசியருக்கானது; வெளிநாட்டினருக்கு அல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

1.99 ரிங்கிட்டில் பெட்ரோல் என்பது மலேசியருக்கானது. வெளிநாட்டினருக்கு அல்ல.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு ஏற்ப,

பெரிய அளவிலான அரசாங்க மானியம் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது.

மலேசியர்களுக்கு ரோன் 95 பெட்ரோலை  அரசாங்கம் 1.99 ரிங்கிட்டுக்கு விற்கிறது.

இருப்பினும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள் சந்தை விலையான லிட்டருக்கு 2.50 அல்லது 2.60 ரிங்கிட்டை செலுத்துவார்கள்.

இது பாகுபாடு அல்ல.

ஆனால் அதன் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொள்கை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset