நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சியின் பேரணி மடானி அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்ச்சியை நிரூபித்துள்ளது: அடாம் அட்லி

கோலாலம்பூர்:

எதிர்க்கட்சியின் பேரணி மடானி அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்ச்சியை நிரூபித்துள்ளது.

கெஅடிலான் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் அடாம் அட்லி இதனை கூறினார்.

தலைநகரில் நேற்று பாஸ் கட்சியின ஆதரவுடன் எதிர்க்கட்சி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி மடானி அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தின் முதிர்ச்சியின் அடையாளமாக மாறியது

மேலும் இந்தப் பேரணி வன்முறை அல்லது அதிகாரிகளின் குறுக்கீடு இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.

கடந்த காலங்களில் கருத்து சுதந்திரம் பெரும்பாலும் அடக்கப்பட்டு, கருத்து வேறுபாடுகள் குற்றமாக மாற்றப்பட்டது.

குரல்கள் நசுக்கப்பட்ட, கூட்டங்கள் தடுப்பட்ட, எதிர்ப்புகள் குற்றமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தை மலேசியா கடந்து வந்துள்ளது.

ஆனால் நாட்டின் அரசியல் சூழல் கணிசமாக மாறிவிட்டது.

மடானி ஆட்சியில் எதிர்க்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் தலைநகரில் எந்தவித இடையூறும் இல்லாமல், வன்முறையும் இல்லாமல் அமைதியாகக் கூட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது நிர்வாகத்தின் பலவீனம் அல்ல, இது உண்மையான ஜனநாயகத்தின் பலம் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset