நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து தீர்வுக் காண தாப்பாகூ சயாங் அகப்பக்கம் அறிமுகம்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து தீர்வுக் காணும் நோக்கில்  தாப்பாகூ சயாங் அகப்பக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இதற்கு முன் மக்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் நேரடியாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு செல்வார்கள்.

அதே வேளையில் அரசாங்க இலாகாக்களுக்கு நேரடியாக செல்வார்கள்.

ஏன் பல முறை அலைக்கழிக்கப்படும் பிரச்சினையையும் எதிர்நோக்குவார்கள்.

இதற்கு எல்லாம் தீர்வு காணும் நோக்கில் இந்த தாப்பாகூ சயாங் அகப்பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அகப்பக்கத்தில் அது குறித்து மனு செய்யலாம்.

அதே வேளையில் ஏதாவது புகார்கள், கோரிக்கைகள், விளக்கங்கள் தேவைப்படுபவர்கள் தாராளமாக இந்த அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இந்த அகப்பக்கம் நிச்சியம்  தாப்பா  நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

அதே வேளையில் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கண்காணிக்கவும் முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset