
செய்திகள் மலேசியா
மலாக்காவில் கால்பதித்த மஹிமாவிற்கு ஆலய நிர்வாகங்கள் மகத்தான ஆதரவை தந்தன: டத்தோ சிவக்குமார்
மலாக்கா:
மலாக்காவில் கால்பதித்த மஹிமாவிற்கு ஆலய நிர்வாகங்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளன.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் ஆலயங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநி தோறும் சிறப்பு கூட்டங்களை மஹிமா நடத்தி வருகிறது .
அவ்வகையில் மலாக்கா மாநிலத்தின் கூட்டம் இன்று ஸ்ரீ சுப்பிரமணியர் துரோபதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
மொத்தம் 70 ஆலய நிர்வாக பிரதிநிதிகள் இந்த அர்த்தமுள்ள அமர்வில் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் மஹிமாவின் மலாக்கா மாநில கூட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது.
மேலும் இந்த கூட்டம் ஒற்றுமை, நோக்கத்தின் பகிரப்பட்ட உணர்வால் நிறைந்திருந்தது.
மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சமூக சவால்களை எதிர்கொள்வது, இந்து சமூகத்தின் வளர்ச்சிக்கான பகிரப்பட்ட பார்வையில் கவனம் செலுத்தப்பட்டது.
அதே வேளையில் மஹிமாவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கோயில்களுக்கு மஹிமா உறுப்பினர் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.
இது வலுவான கோயில்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை நோக்கிய மற்றொரு படியாகும்.
இந்தக் கூட்டத்தை வெற்றிக் கூட்டமாக மாற்றியதற்காக ஆலய நிர்வாகங்கள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
முன்னதாக இக்கூட்டத்தில் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 8:23 pm
தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am