நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

46ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாட்டிற்கான முழுமையான ஏற்பாடுகளில் பிரதமர் திருப்தி அடைந்தார்

கோலாலம்பூர்:

46ஆவது ஆசியான் உச்சிநிலை மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மேற்கொண்ட ஏற்பாட்டு முயற்சிகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருப்தி அடைந்துள்ளார்.

மாநாட்டை சுமூகமாக நடத்துவதற்கு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளின் தியாகங்களையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.

இதில் வெளியுறவு அமைச்சு, முதலீடு, வர்த்தகம்,  தொழில் அமைச்சு, பொருளாதார அமைச்சு, நிதியமைச்சு, பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளின் தளவாட ஏற்பாடுகள் அடங்கும்.

எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறது என்பதில் நான் பெருமையடைகிறேன்.

ஆசியான், ஜி.சி.சி,  சீனா இருப்பதால் இந்த உச்சி நிலை மாநாடு மிகவும் சிக்கலானது என்பதால்,  அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க முயற்சித்தோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset