செய்திகள் வணிகம்
PULSE அமைப்பின் BUSINESS NETWORKING DINNER 2025: சமூக வலைபின்னலுக்கு வழிவகுத்துள்ளது- PULSE அமைப்பின் தலைவர் டாக்டர் புவனேஷ் சுப்ரமணியம் தகவல்
கோலாலம்பூர்
தீபகற்ப மலேசியா தளவாட தொழில்முனைவோர் சங்கம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கமானது தீபகற்ப மலேசியாவில் உள்ள தளவாட தொழிற்துறையை மேம்படுத்தவும் அதன் உறுப்பினர்கள் சமூக வலைப்பின்னலை உருவாக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
அவ்வகையில், நேற்றிரவு நடைபெற்ற BUSINESS NETWORK DINNER நிகழ்ச்சியில் பல முகப்புகளும் அமைக்கப்பட்டு தொழிற்துறை சார்ந்த கருத்துகளும் பரிமாறப்பட்டன.
BKCCஇல் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து அந்தோனி லோக்கிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
லாரி ஓட்டுநர்களை உட்படுத்திய சாலை விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. அவர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்பது இல்லை.
லாரி ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தைக் கையாள அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுகாதார பரிசோதனை கொண்டு வரவேண்டும். இதனால் தளவாட தொழிற்துறையின் ஓட்டுநர்களின் சுகாதாரத்தை கண்காணிக்க முடியும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, PULSE அமைப்பின் ஏற்பாட்டில் BUSINESS NETWORKING DINNER நிகழ்ச்சி BKCCஇல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கலந்து சிறப்பித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
