
செய்திகள் மலேசியா
தளவாட தொழிற்துறை மலேசியப் போக்குவரத்து அமைச்சின் நான்காவது தூணாகும்: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பெருமிதம்
கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் தளவாட தொழில்முனைவோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு BKCC இல் PULSE BUSINESS NETWORK DINNER 2025 நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
இந்த விருந்து நிகழ்ச்சியை மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சிறப்பு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
சிறப்புரையாற்றிய அந்தோனி லோக் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தில் தளவாடங்கள் தொழிற்துறை மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.
ஒரு செயல்திறன் மிக்க தளவாடங்கள் தொழில்நுட்பம் அனைத்து வகையிலான தளவாடங்கள் தொழிற்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று அந்தோனி லோக் சொன்னார்.
மலேசிய போக்குவரத்து அமைச்சில் தளவாடங்கள் தொழிற்துறை என்பது அமைச்சின் தூணாக கருதப்படுகிறது.
லாரி & தளவாட தொழிற்துறையினர் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள தேசிய தளவாடங்கள் மையம் ஒன்று அமைக்கபடவுள்ளது. இதனால் தளவாட தொழிற்துறையின் விவகாரங்களைக் கையாள ஏதுவாக இருக்கும் என்று அந்தோனி லோக் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am