நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா இந்திய அரசு பணியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் IMAIYAM MESRA WALK 2025 சிறப்பாக நடைபெற்றது


சைபர்ஜெயா: 

புத்ராஜெயா இந்திய அரசு பணியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் IMAIYAM MESRA WALK 2025 நிகழ்ச்சி சைபர்ஜெயாவில் சிறப்பாக நடைபெற்றது. 

80க்கும் மேற்பட்ட அரசு துறையைச் சார்ந்த பணியாளர்கள், அவர்தம் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நடைபோட்டியில் கலந்து சிறப்பித்தனர். 

இன்று காலை 7.30க்கு தொடங்கிய இந்த போட்டியானது உடற்பயிற்சி நடவடிக்கையின் மூலம் ஆரம்பமானது. 

அரசு பணியாளர்கள் உடல்நலம் மீது அக்கறை செலுத்தவும் உடற்பயிற்சியை செய்ய ஊக்குவிக்கவும் இந்த MESRA WALK நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக IMAIYAM சங்கத்தின் விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் சதீஸ்வரன் இராஜேந்திரம் கூறினார்.

மேலும், MESRA WALK நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கப்பட்டது.

MESRA WALK நடத்தப்படுவதற்கு முன்னர் உடற்பயிற்சி அங்கம் நடத்தப்பட்டது. இதனை திரு பத்மன் ஏழுமலை வழிநடத்தினார். 

MESRA WALK போட்டி நிகழ்ச்சியில் குலுக்கல் முறை பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கெடுத்த அனைவரும் சுகாதார பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது. 

PERSATUAN PEJAWAT AWAM KAUM INDIA PUTRAJAYA சங்கமானது பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வகையில் MESRA WALK நிகழ்ச்சியானது சிறப்பாக நடந்தேறியது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset