
செய்திகள் மலேசியா
சபா மாநிலத் தேர்தலில் குறைந்தது 13 இடங்களில் போட்டியிட கெஅடிலான் இலக்கு: நூருல் இசா
ஜொகூர்பாரு:
சபா மாநிலத் தேர்தலில் குறைந்தது 13 இடங்களில் போட்டியிட கெஅடிலான் இலக்கு கொண்டுள்ளது.
அக்கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா இதனை கூறினார்.
இந்த இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிகை கூட்டணியுடன் இணைந்து செயல்படும் கட்சிகளின் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சபா மாநிலத்திற்கு குறைந்தபட்சம் 13 இடங்களைப் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் தலைவரிடம் கேட்க வேண்டும்
பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் கெஅடிலான் பேராளர் மாநாட்டில் இறுதி அமர்வில் அவர் இதனை கூறினார்.
முன்னதாக நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவை 17ஆவது சபா பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவதாக அறிவித்தன.
சபா மாநில சட்டமன்றத்தில் போட்டியிடும் கட்சிகள் போட்டியிடும் 73 இடங்கள் உள்ளன.
கடந்த தேர்தலில் கெஅடிலான் இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்தது.
ஆனால் இம்முறை கூடுதல் தொகுதிகளை கெஅடிலான் வெல்ல வேண்டும் என்று நூருல் இசா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am