நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உச்சமன்ற குழு தேர்தலில் ஃபஹ்மி ஃபட்சில் முதல் நிலையில் வெற்றி

ஜொகூர்பாரு:

கெஅடிலான் உச்சமன்ற குழு தேர்தலில் ஃபஹ்மி ஃபட்சில் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

கெஅடிலான் கட்சியின் தேர்தல் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று முடிந்தது.

இதில் கட்சியின் உச்சமன்ற குழு உறுப்பினர்களுக்கான போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது.

இதில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் முதல் நிலையில் அமோக வெற்றி பெற்றார்.

20 உச்சமன்ற பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியது. 

இருப்பினும் அமைச்சர் பாமி பட்சில் 4,811 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் அடாம் அடில் 4,798 வாக்குகள் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

சான் மிங் காய் 4,753 வாக்குகள், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் 4,699 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset