நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

23 மே 1997: எவரெஸ்ட் உச்சியில் முதல் முறையாக மலேசியக் கொடி பறந்த நாள் 

கோலாலம்பூர்: 

28 ஆண்டுகளுக்கு முன், 1997 மே 23ஆம் தேதி,  எம். மகேந்திரனும் என். மோகனதாஸ்சும் உலகின் மிக உயரமான மலையாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் மலேசியர்கள் என்ற பெருமையைப் பெற்றனர். 

இந்த சாதனை மலேசியா-எவரெஸ்ட் திட்டம் 1997 (Malaysia-Everest Project 97) எனும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இதனை மலேசிய மலை ஏறுபவர்கள் சங்கம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்தது. 

மலை ஏறும் நடவடிக்கை  உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் மிகுந்த சவால்கள் நிறைந்த ஒன்றாகும்.

சுவாசிக்கக் கூட ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் உயரத்தில், நான்கு நாட்கள் தொடர்ச்சியாக மலை ஏறி மகேந்திரனும் மோகனதாஸும் மலேசிய கொடியை எவரெஸ்ட் மலை உச்சியில் பறக்க செய்தனர். 

இது வெறும் இருவரின் வெற்றி அல்ல. இது ஒரு தேசத்தின் கனவின் வெற்றியாகும்.

அவர்களின் சாதனையை கௌரவிக்கும் விதமாக  அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டில் பினாங்கு மாநில அரசால் "Datuk" பட்டம் வழங்கப்பட்டது. 

அதன் பின், 2011 ஆம் ஆண்டு, நாட்டின் 13-ஆவது பேரரசர் Yang di-Pertuan Agong Tuanku Mizan Zainal Abidin அவர்களால், தேசிய அளவில் "Datuk" பட்டம் வழங்கப்பட்டது .

28 ஆண்டுகள் கழிந்த போதிலும், இந்நாள் மலேசியா வரலாற்றில் பசுமையான நினைவாக என்றும் நினைவு கூறப்படும்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset